இப்பிரிவானது 1959 ஆம் ஆண்டு WH0 வின் உதவியுடன் அமைக்கப்பட்ட பிற்பாடு நோய்க் கட்டுப்பாட்டியல் பிரிவானது உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார ஆலோசகர் மற்றும் பொதுச் சுகாதாரத்தில் தகைமை பெற்ற உள்ளுர் மருத்துவ அதிகாரி என்போரால் இயக்கப்பட்டது. இவ் உள்ளுர் மருத்துவ அதிகாரியானவர் 1961 ஆம் ஆண்டில் நோய்கட்டுப்பாட்டுவியலாளராக முறைமை ரீதியாக நியமிக்கப்பட்டார். இவ் பிரிவானது பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைகள் மற்றும் கொழும்பு 03 Chelsea Gardens இல் அமைந்துள்ள மருத்துவ புள்ளிவிபரவியலாளர் பிரிவு என்பவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.
1967 ஆம் ஆண்டில் நோய்க்கட்டுபாட்டுவியலில் தேர்ச்சி பெற்ற இன்னும் இரண்டு நோய்க்கட்டுப்பாட்டுவியலாளர்கள் இந்த அலகிற்கு நியமிக்கப்பட்டனர். 1970 ஆம் ஆண்டளவில் இரண்டு பக்க துணை சுகாதாரப்பிரிவுகளாகிய களுத்துறை மற்றும் குருணாகலை என்பன அவற்றின் சொந்த நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் கொண்டிருந்தது. இவ் அதிகாரிகள் WHO வின் ஆதரவுடன் தமது நோய்க்கட்டுப்பாட்டியல் பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
எல்லாப் பிராந்திய சுகாதாரப் பிரிவுகளுக்கும் பிராந்திய நோய்கட்டுப்பாட்டுவியலாளர்களைக் நியமிக்கும் திட்டமானது, பொதுச் சுகாதார துறையில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்பும் அதிகாரிகள் தட்டுப்படாக இருந்தமை காரணமாகத் தடைப்பட்டது. WHO வின் ஆதரவுடன் பயிற்றப்பட்டவர்கள் பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களாக நோய்க்கட்டுப்பாட்டியில் சேவைக்குள் நியமிக்கப்படுவதைக் காட்டிலும் மருத்துவ சுகாதார அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், வவுனியா போன்றனவே பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியிலாளர்களின் சேவைக்குள் உள்ளடக்கப்பட்ட அடுத்த இரண்டு பிராந்தியங்களாக இருந்தன. அதற்குப் பின்பு கண்டியும் இணைந்து கொண்டது.
நோய்க்கட்டுபாட்டியல் அலகிலிருந்த ஒரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளரினால் கொழும்பு பிரதேசத்திற்கு சேவையாற்றப்பட்டது. இவ் அலகில் இருந்த மற்றுமொரு உதவி நோய்க்கட்டுப்பாட்டியிலாளர் தொற்று ஏற்படாத நோய்க் கட்டுப்பாட்டியலுக்கென நியமிக்கப்பட்டிருந்தார். இவ் அதிகாரியானவர் பின்பு சுகாதார அமைச்சுக்குள்ளே புற்றுநோய் பிரிவு ஒரு தனி அலகாக உருவாக்கப்பட்டபோது முதலாவது புற்றுநோய் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்..
பக்ரீறியா இயலில் பட்டப்பின் படிப்பு தகைமையும் பொதுச் சுகாதாரத்திலும் தகைமையும் உடைய ஒரு பொதுச்சுகாதார பக்றீரியாவியலாளர் 1975 இல் இப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரியானவர் தொற்றுநோய்கள் வைத்தியசாலையுடன் இணைந்துள்ளதாக இருந்ததுடன் கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையுடனும் இணைந்திருந்தார். ஆனாலும் அவர் நோய்க்கட்டுப்பாட்டியல் பிரிவு குழாமின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் மற்றும் திடீர் விசாரணைகள் விசேட நோய்கட்டுப்பாட்டியலிலும் சம்பந்தப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் 80 களின் ஆரம்பத்தில் இவ் அதிகாரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இப் பதவிநிலையானது முடிவுக்கு வந்தது.
1970 களில் இப்பிரிவானது இப்போது சுகாதார அமைச்சுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 1986 பெப்ருவரியில் நோய்க்கட்டுப்பாட்டு பிரிவானது தற்போதுள்ள 231, டி சாரம் பிளேஸ், கொழும்பு 10 இல் குடும்ப சுகாதார பணியகத்தையும் கொண்டுள்ள இடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.
1995 இல் இவ் அலகுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆனது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டதுடன், மருத்துவ அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கப்பட்டது. இரண்டு சிரேஸ்ட நிர்வாகத் தர அலுவலர்களையும், 8 விசேட தர அதிகாரிகளையும் இவ் எண்ணிக்கை உள்ளடக்கி இருந்தது. இதற்கு மேலதிகமாக பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை எல்லாமாவட்டங்களுக்கும் நியமிக்கவும் மாகாண நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களை மாகாணங்களுக்கு நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. எல்லா 26 DPDHS பிரிவுகளும் தற்போது ஒரு பிராந்திய நோய்க்கட்டுப்பாட்டியலாளரிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்கின்றது.
1959 ஆம் ஆண்டுகளிலிருந்து இப் பிரிவானது 8 பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளர்களால் வழிநடாத்தப்பட்டுள்ளதுடன், தற்போது இவ் அலகானது பிரதம நோய்க்கட்டுப்பாட்டியலாளரின் கீழான ஒரு முழு பணியாட்டொகுதியினருடன் தொழிற்படுகிறது.
Epid / WHO / NSF CKDu Study 2017
Timor Lestre - Sri Lanka twining agreement
Health and Emergency Response - Flood and landslide 2018 New
Introduction of Human Papillomavirus (HPV) Vaccine into the National Immunization Programme
-----------------------------------------
Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala / Tamil / English )
Printable versions ( Sinhala / Tamil / English )
Triage of fever patients with suspected dengue and criteria for admission
27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.
நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...
தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...
Let Sleeping Demons Sleep
தோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10. தொ. பே : +94-001-2695112, +94-001-2681548 | பெக்ஸ் : +94-001-2696583 மின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி) |
![]() ![]() |
![]() |
|
![]() |